இன்ப இயேசுவின் இணையில்லா
inba yesuvin inaiyillaa
இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புகழ்ந்து இகமதில் பாடிட தருணமிதே இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை இன்றும் என்றென்றும் அவர் துதி சாற்றிடுவேன்
1. நித்தியமான பர்வதமே உந்தனில் நிலைத்திருப்பேன் நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே நித்தம் நடத்திகிறீர் – என்னையும் உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர் உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்
2. பாவத்தில் வீழ்ந்து மாயையிலே ஆழ்ந்து நான் மாள்கையிலே பரிந்து தேவ அன்பினைக் காட்டியே பட்சமாய் பார்த்தெடுத்தீர் பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிக பரலோக நன்மைகளால் நிறைந்தீர்
3. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுமாப் போல் – என் ஆத்துமா உம்பொன் முகம் காணவே வாஞ்சித்து காத்திடுதே வானிலும் இந்தப் பூமிலும் நீர் – என் வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே
4. ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம் அன்பரை உள்ளம் கனிந்தே அளவில்லாத ஜீவனை அளித்தே அற்புத ஜெயம் ஈந்தீரே அல்லேலூயா துதி கன மகிமை – உம் நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
5. சீயோனிலே நீர் சிந்தை வைத்தீர் சேர்த்தொன்றாய் கட்டுதற்காய் திவ்வியபிஷேகம் தந்தெமை நிறுத்தி சேர்த்தீரே சுத்தருடன் சேதம் வராமலே காத்ததினால்-உம்மை சேவிப்போம் நித்திய நித்தியமாய்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
Dm
F A#
Gm Dm
A#
F C F
F Dm
A# C F
C Gm
Dm C
F Gm
A# C F
F Dm
A# C F
C Gm
Dm C
F Gm
A# C F