இன்ப நதியே தென்றலே காற்றே
inba nadhiyae thendralae kaatre
இன்ப நதியே தென்றலே காற்றே அக்கினி தழலே வெண்புறாவே
ஜீவ நதியாய் நீர் வாருமே தென்றல் காற்றாய் நீர் வாருமே அக்கினி தழலாய் நீர் வாருமே வெண்புறாவாய் நீர் வாருமே
வானத்துப் பனியாய் நீர் வாருமே ஞானத்தின் பிறப்பிடமே வாருமே சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே
ஆனந்த தைலமாய் வாருமே ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில் ஆறுதலாய் நீர் வாருமே