இன்ப இன்ப நதியே
inba inba nadhiyae
இன்ப இன்ப நதியே - பரிசுத்த ஆவியே அன்பினால் எம் உள்ளங்களை நிறைத்திடுமே இன்னும் இன்னும் உம்மிலே ஆழ்ந்து நினைத்திடவே சொன்ன போல் இறங்கும் விண் தூய ஆவியே
1. காய்ந்து போன எலும்புகள் உயிரடைய பாய்ந்து ஜீவன் அளித்திடுமே ஓய்ந்து போன அனுபவம் மலர்ந்திடவே ஆய்ந்து எமக்கருள் செய்யுமே - இன்ப
2. அக்கினியால் சாம்பலாக தித்திடவே தக்கதோர் சமயம் இதுவே நீங்கிடவே கரை திரை குறைகளெல்லாம் ஆக்கிடவே உந்தன் சாயலாய் - இன்ப
3. விந்தையாகும் நின் சரீரம் சபையதுவை சந்தியும் நல் வரங்களாலே உந்தனது மகிமையில் வளர்ந்தோங்கவே எந்தையே கிரியை செய்யுமே - இன்ப
4. ஆதி அப்போஸ்தல டவர் உபதேசங்கள் மேதினியில் உயிர் பெறவே நீதியும் சத்தியம் நிறை சாலேம் புரத்தின் பாதைக்குமோர் தீபமாகுதே - இன்ப
5. மெல்கிசேதேக் ஆகும் பரிசுத்த ஆவியே நல்குவீர் நின் முறைமை கதை தொல்லுலகில் சேவை செய்ய பலர் எழும்ப வல்ல அபிஷேகம் ஊற்றும் - இன்ப