இம்மட்டும் என்னை நடத்தி
immattum ennai nadathi
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா இனிமேலும் நடத்துவீரே ஸ்தோத்திரம் கைவிடாமல் காத்து வந்தீர் தேவா இனிமேலும் காப்பீரே ஸ்தோத்திரம்-2
1.தாயின் கருவில் என்னை நீர் கண்டீர் என் பெயர் சொல்லி நீர் அழைத்தீர்-2 உந்தன் நாமம் பாடி என்றும் நான் துதிப்பேன் உமக்கு நன்றி ஐயா-2 இம்மட்டும்(2)
2.உம்மை நோக்கி கூப்பிட்ட வேளை உயர்வான கன்மலைமேல் வைத்தீர் -2 அடைக்கலமும் நீரே கோட்டயும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் (எந்தன்)-2 இம்மட்டும்(2)
3.என்னை மீட்க கல்வாரி சிலுவை ஏத்தீரே என் இயேசு ராஜா-2 மூன்றாம் நாள் உயிர்த்தீர் பரலோகம் சென்றீர் திரும்பவும் வந்துடுவீர்-2 இம்மட்டும்(2)