இமால்ய மலை ஏறி தேசாந்தம்
imaalya malai eri thesaandham
1. இமால்ய மலை ஏறி தேசாந்தம் நோக்குமேன்! வங்காள கடல் தாண்டி மேற்றிசை வாருமேன்! இத்தேசத்தார் எல்லாரும் அஞ்ஞான பாசத்தால் கட்டுண்டு போனார் பாரும் மெய்யறிவின்மையால்.
2. இச்செல்வ தேசம் எங்கும் மா செழிப்பாயினும் நற்கந்தம் வீசுகின்ற இலங்கைத் தீவிலும் ஐயோ! தீயோரின் நெஞ்சு துர்கந்த முள்ளதால் பாதாளத் தீயில் வீழ்ந்து மாள்வாரே பாவத்தால்.
3. ஐரோப்பா ஆசியாவும் ஆப்ரிக்கா கண்டமும் எத்திசை தேசம் தீவும் பூலோகம் அனைத்தும் இம்மானுவேலைச் சேரும் சுதந்திர சொந்தமாய் மெய்மார்க்கம் வளர்ந்தோங்கும் மகா ப்ரபல்யமாய்.
4. யேசுவினாலுண்டான நற் செய்தி கூறுவோம்! பேரன்பின் மகத்தான மெய்ச்சுடர் காட்டு;வோம் பூலோக மெங்குமாக பேரொளி வீசவே நல் மீட்பர் ராஜாவாக வந்தரசாள்வாரே.