இளம் வாலிபமே நீ
ilam vaalibamae nee
இளம் வாலிபமே நீ பதறாதே இளம் வாலிப காலத்தில் திகையாதே இயேசுவே உந்தன் நங்கூரம் உந்தன் நம்பிக்கை உந்தன் இரட்சிப்பு
ஆண்டவரின் பாதத்தில் காத்திருத்தல் கோழையின் செயல் என்று எண்ணாதே காத்திருப்பவன் தன் வாலிப காலத்தில் மிகுந்த பலன் அடைவான்
மலராத நல் மொட்டு இதழ்களை அவசரப்பட்டு விரித்துவிட்டால் இறைவன் அளிக்கும் நல் மனமின்றி கால்களில் மிதிபட்டுமே
காத்திருக்க மனமில்லாமல் சவுல் தன் அரசை இழுந்தானே காத்திருந்த நல் தாவீது மேய்ப்பன் சிறந்த ராஜாவானான்
பதறிய அம்னோன் பாவம் செய்து தந்தைக்கு அவமானம் அளித்தானே பதறாத யோசேப்பு கர்த்தரின் கரத்தில் உயர உயர்த்தப்பட்டான்