இதுவரை காத்தவர் காத்திடுவார்
idhuvarai kaathavar kaathiduvaar
இதுவரை காத்தவர் காத்திடுவார் ஒருபோதும் கைவிடார்
அல்லேலூயா (3) Praise the Lord
1.இன்று வரையில் என்னை நடத்தின எபிநேசர் நீரே இறுதிவரையில் காத்து நடத்தும் கன்மலை நீரே
பல்லவி
ஆராதிப்பேன் உம்மையே - என் ஆயுள் காலம் எல்லாம்
2.சிலுவை மரத்தில் உம் ஏக சுதனை கைவிட்ட தெய்வமே அவர் கதறி அழைத்தும் கைகொடுக்காமல் என் கரம் பிடித்தவரே
பல்லவி
ஆராதிப்பேன் உம்மையே - என் ஆயுள் காலம் எல்லாம்
3.உள்ளங்கையில் என்னை வரைந்த உன்னதர் நீரே என்னை உயர்த்தும் வரையில் உந்தன் வாக்கை காப்பவர் நீரே
பல்லவி
ஆராதிப்பேன் உம்மையே - என் ஆயுள் காலம் எல்லாம்
4.நிழலைப்போல என்னைத் தொடர்ந்து காப்பவர் நீரே பறந்து காக்கும் பட்சி போல பாதுகாப்பவரே
பல்லவி
ஆராதிப்பேன் உம்மையே - என் ஆயுள் காலம் எல்லாம்
5.உலக நேசம் மாயை என்று உணரச்செய்தவரே உண்மை நேசம் விளக்கி காட்ட உயிரைக் கொடுத்தவரே
நேசிக்கிறேன் உம்மையே அகாப்பே (நேசரே) காதலா