இதுவரை என்னை நடத்தி வந்தீரே
idhuvarai ennai nadathi vandheerae
இதுவரை என்னை நடத்தி வந்தீரே இதுவரை என்னை காத்து வந்தீரே அனுதினம் புதுபெலனை தந்தீரே தேவனே
என்னை நடத்திடும் தேவன் நீர் என்னை காத்திடும் தேவன் நீர் - 2 - இதுவரை
1. தகுதியில்லை என்று நினைத்தப்போதிலும் தகுதியாய் என்னை நிறுத்தினீர் வேண்டாம் என்று நான் ஒதுக்கப்பட்டேன் - என்னை வேண்டும் என்று பயன்படுத்தினீர்
2. தள்ளப்பட்ட என்னை மூலைக்கல்லாக தள்ளினவர் முன்பு உயர்த்தினீர் தனிமையில் கண்ணீர் வடித்தபோது - உந்தன் தயவினால் என்னை தாங்கினீர்
3. தேவைகள் இருந்த போதிலும் தேவையானதை தந்தீரே எதிரிகள் எழும்பி நின்றபோதிலும் எனக்காக யுத்தம் செய்தீரே