இதோ வான் முகில்
idho vaan mugil
1. இதோ - வான் முகில் மீதேறி வருவார் விண் தூதர் கள் சூழ்ந்திட வருவார் எண்ணில்லாத சித்தருடன் கண்ணிமை நேரத்தில் வெளிப்படுவார்
அல்லேலூயா அல்லேலூயா என் இயேசு வருகின்றார்
2. மண்ணில் - மரித்த தூயர் உயிர்த்தெழும் பாரில் உயிருள்ளவர் மறுரூபமடைய அழிவென்பதே இனி இல்லையே வாழ்வோமே நீடூழி காலங்களாய் - அல்லே
3. மீண்டும் - வருவேன் என்று சொல்லி சென்றவர் வரும் வேளை நெருங்கி வந்திடுதே சுத்தர் இன்னும் சுத்தமாவீர் சத்திய தீபம் உயர்ந்திடுவார் - அல்லே
4. குறையேதும் இல்லாத தம் சபையை மணவறையில் மறைத்திட நினைந்து அருமை இயேசு மணவாளனாய் வருவாரே புவி நோக்கி அதிவேகமாய் - அல்லே
5. சீயோன் சாலேம் அதெ வாசஸ்தலம் சர்வ வல்ல தேவன் தாபரமே சேர்ந்ததிலே சேவை செய்ய சோகத்தால் சோருதே எம்முள்ளமே - அல்லே