இதயத்தை உம்மிடம் தந்து
idhayathai ummidam thandhu
இதயத்தை உம்மிடம் தந்து இருகரம் நான் என்றும் உயர்த்தி உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே -2
ஆராதிப்பதே என் வாஞ்சையையா உயர்த்துவதே என் மேன்மையையா -2
ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம் -2
அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை தந்து உந்தனின் உள்ளங்கையில் வரைந்தீரையா -2 எனக்குள்ளதெல்லாம் உனக்கே என்று மாறாத வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா -2
முழு இதயத்தோடு உம்மை துதிக்க முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்த தாயின் கருவில் என்னை தெரிந்தீரையா -2 விலையேறப்பெற்ற உந்தன் இரத்தத்தால் கழுவி என்னை உம்சேவை செய்ய என்னை அழைத்தீரையா. -2