இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
idhayam paadum iniya paadal iraivaa umakkaaga
இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக- இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக
நினைத்தேன் நினைத்தேன் நான் தர அனைத்தும் உந்தன் காணிக்கை ( 2 )
1. பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு காய்த்துக் கனிந்த கனிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் அதைச் சூழ்ந்து வளர்ந்த செடிகளும் இயற்கை கூறும் கவிதைகள் யாவும் இறைவன் தந்த கொடைகளே ( 2 )
2. பறந்து திரியும் பறவைகள் அவை பாடும் கடல்வாழ் விலங்குகள் காற்றும் கடலும் கார்முகில் வான வில்லும் நிலவும் விண்மீன்களும் இயற்கை கூறும் கவிதைகள் யாவும் இறைவன் தந்த கொடைகளே ( 2 )