இடையில் என் பாடல்
idaiyil en paadal
இடையில் என் பாடல் நின்றும் விடாது என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது படகில் நான் பயணம் செய்கின்றபோதும் என் பரமனின் பலமே எனைக் கரை சேர்க்கும்
இடைவரும் துன்பம் எது வந்த போதும் என் இயேசுவுக்காய் அதைத் தாங்கிடக் கூடும் பலமுள்ள பரிசுத்த ஆவியினாலே திடன்கொள்ள என்னை அவர் நிரப்பிடக்கூடும்
கடையவன் என்றென்னைக் கைவிட மாட்டார் என் நடைமுறை வாழ்வுக்கு வழிதந்த மேய்ப்பன் உலகுக்கு ஒளியாக உயிர்தந்த நாதன் இவருக்கு இணையாக இனித் தெய்வம் இல்லை