இடைவிடாமல் துதிப்போம்
idaividaamal thudhippom
இடைவிடாமல் துதிப்போம் இன்பம் ஏற்றதும் அதுவாகும்
1. எரிகோ மதிலைக் கீழே அன்று வீழ்த்தினர் துதியாலே அரண்களைத் தகர்த்தெறியும் - வல்ல ஆயுதம் அதுவாகும்
2. சீரியாவின் சேனை - அன்று அழிந்ததும் துதியாலே யோசபாத்தின் சேனை - ஜெயம் அடைந்ததும் துதியாலே
3. பவுல் சீலாவைப் போல - வரும் துன்பத்தில் துதி பாடு கசந்த வாழ்வே மாறும் நம் கவலை யாவும் தீரும்
4. கஷ்டமதிலும் துதிப்போம் பெரும் நஷ்டத்திலும் துதிப்போம் நிந்தையினிலும் மகிழ்வோம் வரும் எந்த வினையும் அகலும்
5. ஆபிரகாம் போல - அவர் வாக்கை நம்பியே துதிப்போம் வேகம் இயேசு வருவார் - அவர் வாக்கின்படியே அருள்வார்