கீதங்கள் பாடுவோம் சங்கீதங்கள் பாடுவோம்
geedhangal paaduvom sangeedhangal paaduvom
கீதங்கள் பாடுவோம் சங்கீதங்கள் பாடுவோம் சந்தோஷ ராஜனாம் இயேசுவை பாடுவோம் -2 சமாதான தேவன் இயேசுவை பாடுவோம் -2 சாவாமை உடையவர் இயேசுவை பாடுவோம் -2
1) பகலிலே மேகஸ்தம்பம் இயேசுவை பாடுவோம் இரவினில் அக்கினிஸ்தம்பம் இயேசுவை பாடுவோம் -2 எருசலேம் வாழ்வு தரும் இயேசுவை பாடுவோம் -2 ஏழைகள் தெய்வம் இயேசுவை பாடுவோம் -2
2) பசி தீர்க்கும் ஜீவ அப்பம் இயேசுவை பாடுவோம் தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் இயேசுவை பாடுவோம் -2 நாசியில் சுவாசம் தரும் இயேசுவை பாடுவோம் -2 நமஸ்காரம் சொல்லி சொல்லி இயேசு பாடுவோம் -2
3) ஆயுளை நீட்டிக்கும் இயேசுவை பாடுவோம் அதுவரை சுகம்தரும் இயேசுவை பாடுவோம் -2 அற்புதங்கள் செய்திடும் இயேசுவை பாடுவோம்-2 அல்லேலூயா சொல்லி சொல்லி இயேசுவை பாடுவோம் -2