கீதம் பாடுவோம் யாத்ரை களைப்புப்போக்க
geedham paaduvom yaathrai kalaippuppokka
1. கீதம் பாடுவோம் யாத்ரை களைப்புப்போக்க கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம் நித்ய பகலில் இருள் இல்லாமலே போம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.
பல்லவி
கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரத்தில் அக்கரை சேர்ந்திடுவோம் அலை புயல் அமர நாமெல்லோரும் கூடுவோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.
2. செய்ய வேண்டிய வேலை யாவும் நாம் செய்வோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம் தெய்வ கிருபை தினம் பெலனளிக்கும் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.
பல்லவி
கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரத்தில் அக்கரை சேர்ந்திடுவோம் அலை புயல் அமர நாமெல்லோரும் கூடுவோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.
3. முசிப்பாறுதல் கண்டடைவோம் நாம் அங்கே கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம் மோட்ச நகரில் கண்ணீர் கம்பலை இல்லை கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.
பல்லவி
கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரத்தில் அக்கரை சேர்ந்திடுவோம் அலை புயல் அமர நாமெல்லோரும் கூடுவோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.