கீத சத்தத்தால் கெம்பீரமாகவே
geedha sathathaal kembeeramaagavae
கீத சத்தத்தால் கெம்பீரமாகவே கீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமே ஆனந்தமாகவே ஆர்ப்பரிப்புடனே நித்யானந்தரைநிதமும் பாடுவேன்
1. வீணையினாலும் தம்புருவினாலும் கின்னரத்தாலும் என் நாவினாலுமே சுரமண்டல தொனியும் முழங்க சீரேசு நாதனை சிறப்பாய் பாடுவேன்
2. பத்து நரம்பும் போதாதென்றெண்ணியே மெத்தவும் மனம் துதியால் நிறைந்தே உத்தம ஆசீர் உள்ளத்தில் பெற்றிட உன்னத தேவனை உயர்த்தி துதிப்பேன்
3. நானிலந்தன்னில் நல் இயேசுவின் எல்லா நன்மைகளையும் ஒவ்வொன்றாய்எண்ணியே நன்றியினாலென் இதயம் பொங்கிட நடனமாடியே ஆவியில் மகிழ்வேன்
4. தேவ ஆவியால் இன்னிசை நாதங்கள் ஏக சத்தமாய் இசைந்திலங்கிட தேவமகிமை மேகமாய் இறங்க தேவாதி தேவனை புகழ்ந்து போற்றுவேன்
5. ஜெயங்கொண்டோனாய் சீயோன் சிகரத்தில் ஜெயவீரனாம் இயேசுவுடனே நான் தேவ சுரமண்டலம் கரத்தில் ஏந்தியே ஜெயத்தின் கீதங்கள் களிப்பாய் பாடுவேன்