எழுப்புதல் தேசம்
ezhuppudhal thesam
எழுப்புதல் தேசம் என் இந்திய தேசம்-2 பாழாகக் காரணம் என்ன -2 நாங்கள் ஜெபிக்காததோ கண்ணீர் வடிக்காததோ-2 தேசம் அழிக்கின்றது-எங்கள் தேசம் அழுகின்றது-2- எழுப்புதல்
நோயால் பாதிக்கப்பட்ட ஜனங்களுண்டு மருத்துவரால் கைவிடப்பட்ட ஜனங்களுண்டு -2 இயேசுவே மனமிரங்குமே-2 என் ஜனம் மேல் நீர் கிருபையாயிரும் தேசத்தின் மேல் நீர் கிருபையாயிரும்-2
எங்கு சுற்றி பார்த்தாலும் வறுமை ஓங்குதே ஜனம் மேல் ஜனங்களுக்கு அன்பு தனிந்ததே-2 ஜெபிக்கனும் கண்ணீர் வடிக்கனும்-2 அழிந்து போகின்ற ஜனத்திற்காக-2
திறப்பிலே நின்று ஜெபிக்கும் ஜனங்கள் குறைந்ததே ஆத்தும பாரத்தை என் இதயத்தில் தாரும்-2 இறுதிநாள் இது அல்லவோ-2 சீக்கிரமாய் இயேசு வருகின்றாரே-2