எழுந்து கட்டுவோம் வாருங்கள்
ezhundhu kattuvom vaarungal
எழுந்து கட்டுவோம் வாருங்கள் இந்த நல்ல வேலைக்கு எழுந்து கட்டுவோம் வாருங்கள் இந்த மாபெரும் சேவைக்கு
பரலோகத்தின் தேவன் நம்மோடுண்டு காரியம் வாய்த்திடச் செய்திடுவார் -(2)
பெரியவர் நம் தேவனன்றோ மாறாதவர் நம் இயேசுவன்றோ-(2)
எதிரியின் கண்ணிகள் தந்திரங்கள் யூத இராஜ சிங்கம் முன் நிற்காதே-(2) எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்-(2) நிரப்பிடும் எல்ஷடாய் நமக்கு உண்டே -(2)
தொபியாவின் தொல்லைகள் எழும்பினாலும் சன்பலாத்தின் சவால்கள் எதிர்த்திட்டாலும் -(2) உபவாசிப்போம் ஜெபத்திடுவோம்-(2) நன்மையாய் முடித்திடும் யெகோவா உண்டே-(2)
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் நம் காரியம் கைகூடி வரப்பண்ணுவார் -(2) விசாரப்படோம் கவலைப்படோம் -(2) இயேசுவில் மகிழ்ச்சியே நமது பெலன் -(2)