எழுந்திடு நண்பா எழுந்திடு
ezhundhidu nanbaa ezhundhidu
எழுந்திடு நண்பா எழுந்திடு நண்பா ஜெப ஊழியம் தொடரட்டும் உன்னால் புறப்படு நண்பா புறப்படு நண்பா சுவிசேஷம் தொடங்கட்டும் உன்னால் நம் தேவன் கூறும் தேவன் இங்கில்லை அவர் காட்டும் அன்பு என்றுமே ஈடு இல்லை நம்மோடு அவர் இருந்தால் துன்பம் இல்லை அவர் காட்டும் பாதை சென்றால் பயமில்லை
நமக்காய் ஜீவன் தந்த இயேசுவின் நாமம் சொல்ல தோழா நீயும் புறப்படு இன்றே நமக்காய் மறுபடியும் உயிர்த்த அதிசய நாமம் சொல்ல போலி நீயும் புறப்படு இன்றே (இந்த பூமியில் ஒரு பரலோகம் உருவாக்க நாம் சேர்வோம்) -2
பாவிகளான நம்மை பாசம் செய்த தேவன் ஏசி என்று சொல்ல புறப்படு பரத்தில் நிரந்தர வீடு நமக்காய் கட்டின தேவன் இயேசு என்று சொல்ல புறப்படு (சேர்வோமே ஒன்றாய் சேர்வோமே சாத்தானின் கோட்டையை உடைக்க)-2
பாவத்தின் வாழ்வை வெறுத்து நீதியின் பாதையில் செல்வோம் நம்மோடு கூட வருபவர் பெரியவர் உலகத்தில் உபத்திரவம் உண்டு உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடமாய் இருங்கள் உலகத்தை ஜெயித்த தேவன் நம்மவர் ( சேர்வோமே கரங்கள் சேர்வோமே நம் தேவனின் ராஜ்ஜியம் கட்ட )-2