எழும்பு சீயோனே இயேசு
ezhumbu seeyonae yesu
எழும்பு சீயோனே இயேசு இதோ வருகிறார் - வேகம்
1. இயேசுவின் வருகை மிக சமீபம் ஆகுதே இனி மோசந்தான் அசதியாக ஜீவித்து வந்தால் பின்பு அலறி விடுவாயே இயேசு கைவிடும் போது - வேகம்
2. பூலோக நேசம் உன்னில் சற்றும் வேண்டாமே நீயும் மேலோகம் பார்த்து பார்த்து லோகத்தை வெறு இது மாய லோகமே உன்னை மோசம் போக்குமே - வேகம்
3. பாரங்கள் இருதயத்தில் ஏதேனும் உண்டோ சிறு பாரங்கள் உன்னை கீழே தள்ளிவிடுமே உந்தன் இருதயத்தை நீ பரிசுத்தமாக்காயோ- வேகம்
4. லௌகீக கவலையோடு பெருந் தீனியும் வெறும் மாமிச சுபாவத்தோடு நான் என்பதுமே உன்னை மோசம் போக்குமே உந்தன் ஆசை அழியுமே- வேகம்
5. மேகத்தில் இயேசு ராஜன் வேகம் வரவே பரம் ஏறுவார் பரிசுத்தர் வேறு ரூபமாய் அன்று மேகம் ஏறிட நீயும் ஆயத்தம் தானா - வேகம்
6. ஆகாயத்தில் நடக்கும் கல்யாணத்திலே சுத்தர் பாடுவார் அல்லேலூயா செட்டை அடித்து அப்போ அங்கிருப்பாயோ பூவில் ஓடி ஒழிப்பாயோ - வேகம்
7. அந்திகிறிஸ்து அரசாட்சி செய்யும் வேளையில் கோர அக்கினி பூமியில் சொரியும் வேளையில் நீயும் அகப்படாமலே இன்று தப்பி கொள்வாயே - வேகம்