எழும்பிப் பிரகாசி உன்னொளி வந்தது
ezhumbip piragaasi unnoli vandhadhu
எழும்பிப் பிரகாசி உன்னொளி வந்தது ஈசன் மகிமையும் உன்மேல் உதித்தது.
இருள் மூடி னாலும் அருள்பிர காசம் திரள்மக்கள் காண ஒளிர்வதி னாலே
காரிருள் பூவில் கவிழ்ந்திருந் தாலுமே கர்த்தன் மகிமையே காணப் படுமுன்மேல் பாரிலுள்ளோர் உன்னைப் பரிவுடன் நாடுவார் பக்தலும் பேரொளி கண்டுமே பாடுவார் - எழும்பிப்
உன்னொளி தன்னில் உலகத்தில் ஜாதிகள் உன்வழி மண்ணிஆல மன்னரின் பாதங்கள் உன்குமாரர் தூரத்தில் சென்றாலும் மீளுவார் உன்குமா ரத்திகளும் உன்பக்கம் வாழுவார் - எழும்பிப்
உன்வானச் சூரியன் அஸ்த்தமிப்ப தில்லை உனது நிலவு மறைவது மில்லை உன்தேவன் எந்நாளும் உந்தன் மகிமை உனக்கு அவர்தானே நீங்கள் இனிமை - எழும்பிப்
சின்னவன் ஆயிர மாயிர மாவான் சிறியவன் வல்லதோர் ஜாதியு மாவான் உனதுஜனம் பூமியை ஆட்சி புரியும் எனது புகழ்கண்டு என்கிரியை யாவார்! - எழும்பிப்