எழும்பிடுவீரே வாலிபரே
ezhumbiduveerae vaalibarae
எழும்பிடுவீரே வாலிபரே எடுத்திடுவீர் சிலுவைக் கொடியை தேவாதி தேவன் செய்த நன்மைகளை தேசமெங்கும் பறைசாற்றுவோம்
பாவ பாரம் நீக்கி இளைப்பாறுதல் தந்தார் சாப ரோகம் நீக்கி சுத்தமாக்கினார் இரட்சிப்பின் வஸ்திரம் எனக்குத் தந்தார் நீதியின் சால்வை எனக்களித்தார்
பரிசுத்த ஆவியின் வல்லமை தந்தார் பரிசுத்த ஜீவியம் காணச் செய்தார் அந்நிய பாஷைகளைப் பேசச் செய்தார் தேவாவியாலே அபிஷேகித்தார்
சாத்தானின் மேல் அதிகாரம் தந்தார் பாவங்கள் ஜெயிக்க வல்லமைதந்தார் தேனினும் இனிய வேதம் தந்தார் தாயினும் மேலாய் நம்மைத் தேற்றுவார்
மேகங்கள் மீதினில் வந்திடுவாரே மறுரூபமாக்கி நம்மை அழைத்துச் செல்வார் ஆயிரம் வருட அரசாட்சியில் ஆயத்தமாக நீயும் ஓடி வா