எழும்பிடுவாய் ஓ திருச்சபையே
ezhumbiduvaay o thirucchabaiyae
எழும்பிடுவாய் ஓ திருச்சபையே எழுப்பிடுவாய் ஜெய வீரர்களை பூரண சுவிசேஷ வீரர்களாய் புறப்படட்டும் எங்கும் அணியணியாய்
1. இயேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை இந்திய நாட்டில் திரட்டிடுவோம் - நாம் சிலுவைக் கொடி பிடித்தே - அல்லேலூயா சீயோனின் பாதைச் செல்வோம்
2. களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம் நாம் கழுகினைப் போல் பறந்தே - அல்லேலூயா கர்த்தரின் சேவை செய்வோம்
3. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே - நம் தியாகத்தின் பாதையிலே - அல்லேலூயா தினமும் நடந்திடுவோம்
4. ஆவியினால் எப்பொழுதும் நிறைந்தே ஆவியின் வரங்களை உடையோராய் - நாம் ஆயத்தமாக நிற்போம் - அல்லேலூயா ஆர்ப்பரித்தே மகிழ்வோம்
5. எதிரியின் சேனைக்குள் பாய்ந்தே செல்வோம் எதிரியின் கோட்டைகள் தகர்த்தெறிவோம் - நாம் எதிரியை வீழ்த்திடுவோம் - அல்லேலூயா எழுதின பட்டயத்தால்
6. பாவத்தின் சிறைகளில் வாடிடும் மக்களை பாவத்திலிருந்தே விடுதலை செய்வோம் - நாம் பரிசுத்தர் கூட்டமொன்றை - அல்லேலூயா பரமனுக்காய் சேர்ப்போம்
7. எக்காள சத்தம் தொனித்திடும் எதிர்கொண்டு இயேசு ராஜனை சந்திப்போம் - நாம் மேகத்தில் ஏறிச் செல்வோம் - அல்லேலூயா மேதினியை ஆண்டிட