எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது
ezhumbi piragaasi un oli vandhadhu
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது ஜாதிகள் உந்தன் வெளிச்சத்தினிடத்தில் ராஜாக்கள் உந்தன் ஒளியினிடத்தில் நடந்து வருவார்கள் மகிமை காண்பார்கள்
மகிமையின் ஆலயத்தை அவர் மகிமை படுத்திடுவார் வாசல்களோ இரவும் பகலும் ஆண்டவர்க்காய்திறந்தே இருக்கும் - எழுப்புதல் காண்போம் வாஞ்சை நிறைவேறுமே
பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருக்கு கொடுத்திடுங்கள் கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும் என்று சொன்னவர் இயேசு அவர் உண்மையுள்ளவர்
வெண்கலகதவுகளோ உடைந்து தன் போய்விடுமே - இரும்பு தாழ்பாள்கள் முறிந்து போய்விடுமே கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் அவரே தேவன் என்று தொனிக்கும் நாட்கள் நெருங்கிடுமே மகிமை தங்கிடுமே
சின்னவன் ஆயிரமும் சிறியவன்ஜாதியுமாம் பரிசுத்த தேவனுடைய சீயோனுமாயிடுவான் அவரே சொன்னார் அவரே செய்வார் வார்த்தை நம்பிடுவோம் நிச்சயமாய் செய்வார்