எழும்பி பிரகாசி
ezhumbi piragaasi
எழும்பி பிரகாசி! ஓ சபையே! உன் ஒளி வந்தது வே ஏகமாய் உணர்ந்து உன் பெலன் தரிக்க உற்றதோர் வேளையிது சரணங்கள்
1. காரிருள் கவருதே காசினியே கதிரருள் மறைந்திடுதே எவருமெக் கிரியையும் செய்திட இயலா இராக்காலம் உனையே அடுத்து வந்திடுதே - எழு
2. ஆவியின் அருளால் மாறியதோர் புதிய சிருஷ்டியும் நீயே பெந்தெகொஸ்தின் உயர் ஜீவிய வழியாக மாந்தரும் அறிய உபதேச ஒளியில் - எழு
3. நேத்திரம் உயர்த்தி நிக்கிடுவாய் நித்தம் உன் மீட்பினையே துயர துறந்து துயிலிடம் எழுந்து துய்யதுன் உடையே காத்துக் கொள்வாயே - எழு
4. சத்திய ஜீவியம் நடந்திடவே உத்தம வழி உன்னிலுண்டே மெல்கிசேதேக்கின் நல் முறைமையில் மலர்ந்த ஞாலத்தில் உயர்ந்த சபையும் நீ அல்லவோ - எழு
5. நீதியின் பரம! எருசலேமே! சீயோன் அருள் உந்தன் ஒளியே கிருபையின் உருவாய் கிறிஸ்துவின் நிறைவாய் திரு நகரமதாய் ஜொலித்திடுவாயே - எழு