ஏழையை மீட்ட ஏசுவே சுவாமி
ezhaiyai meetta esuvae suvaami
ஏழையை மீட்ட ஏசுவே ராஜா (சுவாமி) அடிமை சரண் புகுந்தேன்
நீசனா மென்னைத் தேடினீரே காசினியிலன்பு கூர்ந்து
1. என் பாவம் போக்க எடுத்தார் இறைவா ஈனக்கோலமதை என்னதானிதற்கீடு செய்குவேன் அன்னையே விளம்புவீரே
2. தூரமாய்க் கிடந்தே தொல்லைகளடைந்தே தூயா உனை மறந்தேன் தூக்கினீர் என்னைச் சேற்றினின்றே தேற்றினீரும்மாவியாலே
3. விண்ணை நீர் மறந்தீர் விரோதியாமெனையே விண்ணில் சேர்த்திடவே வேண்டுதல் கேளும் வேந்தனே அருள் தேவனே சகாயனே
4. பாவத்தின் கூலி மரணமாம் பயத்தை ஜெயித்தவர் யேசுகோமான் ஜீவனும் சமாதானமும் மீந்து தேவனின் சமூகமீகந்தார்
5. மாயமாம் உலகின் வேஷத்தை வெறுத்தேன் மன்னா உன் அன்பாலே சொன்னீரே மகிமையில் சேர்ப்பதாய் உன்னதா உன் வாக்கை நம்பி