ஏழைகளின் பெலனே
ezhaigalin pelanae
ஏழைகளின் பெலனே எளியோரின் திடனே-2 பெருவெள்ளத்தில் புகலிடமே பெரும் கன்மலையின் நிழல் நீரே-2
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம் எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்
உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம் எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின்
1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரே கசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2 திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில் இனிய இசையாக வந்தவர் நீரே-2 இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே
2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரே மனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2 எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரே இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-2 இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-எங்கள் கர்த்தாவே