ஏழை எந்தன் ஜெபத்திற்கு
ezhai endhan jebathirku
ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட எனக்கு யாரப்பா இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா
உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா கூடாதது ஒன்றுமில்லப்பா- 2 முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும் செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2 கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை
ஐந்து அப்பம் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2 சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2 கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2
கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா கூடாதது ஒன்றுமில்லப்பா-2 காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே-2 கூடாதது ஒன்றுமில்லப்பா-2