ஏழை எனக்காக எல்லாம் படித்த
ezhai enakkaaga ellaam paditha
1. ஏழை எனக்காக எல்லாம் படித்த இயேசுவே, நேசத்தால் ஏற்றுக் கொண்டார்; என்னில் ஒரு நன்மையும் இல்லையே, ஏகனே! எல்லாம் உம் கிருபையே
அலை போல் அருள், ஆழிபோல், - அன்பு அனுதினம் எனக்களிக்கிறீர்; அல்லேலூயா! அல்லேலூயா! அல்லும் பகலும் நாள் பாடிடுவேன்.
2. சோதனையாலே சோரும் போது உள்ளம் சார்ந்திடுவேன் உந்தன் சாட்சிகளில் சாத்தானை ஜெயிக்க சத்தியத்துடன் சக்தியும் அளிப்பீரே,
3. களிமண் போல கர்த்தனே! உந்தன் கைகளில் என்னைக்கையளிக்கிறேன் கண்மணி போலவே காப்பீர் இக்கானிலே கலங்கிடுவேனோ நான்?
4. நீரே என் வாஞ்சை, நீரே என் தஞ்சம் நீரோடையில் அகம் தாகம் தீர்ப்பார் நீதி சமாதான சந்தோஷத்தால் உள்ளம் நிறைத்திடுவீர் ஐயா!
5. வந்திடும் இந் நம்பிக்கையிலே எந்தை! என் உள்ளம் துள்ளிடுதே, மந்தையின் மாபெரும் மேய்ப்பரை வால் சந்திப்பேன் ஆயத்தமாய்