ஏழாம் நாள் ஓய்வு நாளென இயம்பும்
ezhaam naal oyvu naalena iyambum
ஏழாம் நாள் ஓய்வு நாளென இயம்பும் இன்ப வேதம் இதனை மறுத்து மீறல் அதிகம் வருகும் துன்பம் சோகம்.
1. இச் சுவிசேஷத்தினால் என்றுமே சிலாக்கியம் யேசுவிடம் சேர்வதற்குக் கிட்டிடும் நற்பாக்யம்.
2. மேதினியை மீதிலெங்கும் மெய் அறிவில் தேற ஆவியின் அருள் நிறைந்து பாவ இருளைப் போக்க.
3. இப்புவியோர் எவரும் சத்ய மறையில் சேர தப்பான மதங்கள் யாவும் தாரணியில் மாற.
4. விந்தையுடன் புவியோர் யேசுவண்டை சேர சொந்தமாக மெய் மறையைத் தந்ததுமே பாக்யம்.
5. தேசமெங்கும் பரவி சீர் கெட்டோரை மேவி பாசமுடன் யேசு பாதம் தாவியே பணிவோம்.