எவனுடைய மீறுதல்
evanudaiya meerudhal
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ எவன் பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவாள்
எவன் அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணமாட்டாரோ ஆவியில் கபடமில்லாதவன் பாக்கியவான்
நான் அடக்கிவைத்த மட்டும் என் எலும்புகள் நித்தம் என் கதறுதலினால் உலர்ந்தது
இரவும் பகலும் என்மேல் உம்தன் கை பாரமா யிருந்ததால் என் சாரம் போயிற்று
என் அக்கிரமத்தை நான் மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்
கர்த்தருக்கென் மீறுதலை அறிக்கை செய்தேன் தேவரீர் என் பாவ தோஷத்தை மன்னித்தீர்
இதற்காக சகாயம் கிடைக்கும் காலத்தில் பக்தியுள்ளவன் உமக்கு விண்ணப்பம் செய்வான்
மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அப்பொழுது அது அவனை அணுகாது
எனக்கு நீர் மறைவிடமா யிருக்கிறீர் என்னை விலக்கிக் காரும் இக்கட்டுக்கு நீர்
இரட்சணியப் பாடல்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர் தேவனே