எத்தனை பாடலை நான்
ethanai paadalai naan
எத்தனை பாடலை நான் பாடிய போதுமெந்தன் கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும் இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா
நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும் தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு-அந்த சத்தியப் பாடலினைப் பாடுவதால்-தினமும் இத்தரை மீதினிலே மகிழ்ச்சியுண்டு
உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு-அந்த சத்திய நாதனின் பாட்டினிலே-நல்ல நித்திய வாழ்வுக்கும் வழியுமுண்டு