எத்தனை நன்மைகள் எனக்கு
ethanai nanmaigal enakku
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் ஆனால் நான் ஒன்றுக்கும் தகுதி இல்லை -2
ஏகோவா யீரே எபிநேசரே நிலைநிறுத்தி நீரே இதுவரையில் -2
உமக்காகவே நான் வாழுவேன் உம் சேவையை நான் தொடருவேன் உம்மையே நான் நேசிப்பேன் உண்மையாய் ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் -2
என்மேல் அன்பு வைத்தவரே என்னையும் அழைத்த வல்லவரே -2 தந்தேன் என்னை உம் சேவைக்காக முற்றிலும் என்னை அர்ப்பணித்தேன் -2
ஜீவனை வெறுத்து தியாகமாய் சேவை என்றும் நான் செய்திடுவேன் -2 என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் உம் சித்தம் நான் என்றும் செய்திடுவேன் -2
கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் உன்னத படையில் உழைத்திடுவோம் -2 ஒன்றாய் இணைந்து நாம் நின்றிடுவோம் மாரநாதா அல்லேலூயா -2