எத்தனை நன்மைகள் எனக்கு
ethanai nanmaigal enakku
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் இரட்சிப்பின் பாத்திரம் கையில் எடுத்து இரட்சகரை துதிப்பேன்
நன்றி இயேசையா
கடந்த நாளில் உம்மை அறியா குருடனைப் போல் அலைந்து திரிந்தேன் தேடி வந்தீரே என்னையும் இயேசையா மீட்டுக் கொண்டீரே
பாடுகள் என்னை சூழ்ந்த போது வேதனையில் நான் கதறியழுதேன் தாயினும் மேலாக இயேசையா மார்பில் அணைத்துக் கொண்டீர்
பாவியாக இருந்த என்னை நீதிமானாய் மாற்றிடவே சிலுவையை சுமந்தீரே எனக்காய் ஜீவனை தந்தீரே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் என்மேல் பொழிந்தீர் என்றும் மறவேனே இயேசையா பாடித் துதிப்பேனே