எத்தனை இன்பமிது
ethanai inbamidhu
1. எத்தனை இன்பமிது - ஏழை எனக்கெத்தனை இன்பமிது சத்திய வேத வினோத விசேஷங்கள் எத்தனை இன்பமிது
2. சத்துரு சேனைகளாம் - உலகுடல் சாத்தான்செய் தீமைகளில் பார்த்துப் படித்துத் தினமும் ஜெயம் பெறப் பாத்திரமானதிதே
3.பட்டினி தாகத்தையும் -பலவிதக் கட்டுகள் காவலையும் சட்டை செய்யாமல் சந்தோஷமடைந்திட சக்தியு மீந்திடுதே
4. துன்பம் பெருகிவிட்டால் - அன்பர் முகம் தூரமில்லை இன்பமொழிதரும் இங்கித வேதத்தில் எல்லா மதிசயமே யெனவே
5. தீய வழி நடந்து - சிறியன்யான் செய்த வினைகளெல்லாம் நேயமுடன் பொறுத்தாளுகிறாரென்று கூறும் நல்வேதமிதே
6. பாரம் மிகுந்தவரே - வாருமுங்கள் பாரமிறக்கிடுவேன் - 2 பாரச்சிலுவை சுமந்தேன் பாவம் தீர்த்தேன் பாரென்னும் வேதமிதே
7. ஆரும் சகாயமின்றி - அனாதையாய்த் தீரும் சமயத்திலும் வெறுக்கும் வேளையிலும் ஊரும் உற்றாரும் உற்ற துணையிதுவே
8. வீடு விட்டோடுகையில் - வேதமொன்று தேடியெடுத்துக் கொண்டால் காடும் மலையும் நல்வீடும் வெளிச்சமும் ஆகுமென் றோதுமிது
9. நித்திய வாழ்வு உண்டு - மோட்ச வீட்டில் நேசர் பலருமுண்டு ஸ்தோத்திரக் கீதங்கள் ஓசை கேட்டானந்தம் கொள்வோ மென்றோதுமிது