எத்தனை இன்பமையா
ethanai inbamaiyaa
1. எத்தனை இன்பமையா எமை எனக்கெத்தனை இன்பமையா சத்திய வேத வினோத விசேஷங்கள் எத்தனை இன்பமையா
2. சத்துரு சேனைகளும் உலகுடன் சாத்தான் செய். தீமைகள் பார்த்து படித்து தினமும் ஜெயம் பெற பாத்திரமானதுவே
3. பட்டினி தாகத்தையும் பலவிதக் கட்டுகள் கவலையும் சட்டை செய்யாமல் சந்தோஷமடைந்திட சக்தியுமிந்திடுமே
4. துன்பம் பெருகிவிட்டால் அன்பர்முகம் துாரமில்லையெனவே இன்ப மொழி தரும் இங்கித வேதத்தில் எல்லாம் அதிசயமே
5. தீய வழி நடந்து சிறியன் யான் செய்த வினைகளையெல்லாம் நேயமுடன் பொறுத்தாளுகிறாரென்று கூறும் நல் வேதமதே
6. ஆரும் சகாயமின்றி அனாதையாய். தீரும் சமயத்திலும் ஊரும் உற்றாரும் வெறுக்கும் வேளையில் உற்ற துணை இதுவே .
7. வீடு விட்டோடுகையில் வேதம் ஒன்று தேடி எடுத்துக் கொண்டால் காடுமலையும் நல்வீடு வெளிச்சமும்! ஆகுமென்றோதுமிது