ஏசுவின் நாமத்தில்
esuvin naamathil
ஏசுவின் நாமத்தில் இரட்சிக்கப்பட ஏசுவினண்டையில் நீ வந்திடு பாவி
உன்னை முற்றும் பரிசுத்தம் செய்திட உந்தனுக்காகவே தம் இரத்தம் சிந்தினார்
பாவத்தின் ஆழத்திலிருந்து உன்னை தாபந்தத்தோடவர் இரட்சித்திடுவார்
பாவத்தை சுமந்தவர் போக்கினார் அன்றோ ஆபத்திலிருந்துன்னை மீட்டுக் கொள்வாரே
உன்னையே இயேசு அழைக்கிறார் இன்று உன்னைத்தம் கிருபையால் நிரப்பிடுவார்
பாவியே நீ இன்று குணப்படுவாய் தாவியே ஏசு உன்னை அழைக்கிறார்
சிலுவை சுமந்தவர் அன்பினைப் பாராய் பாவத்தின் ஆசையை அகற்றிடுவாய்
பாவிகளை ஏசு நியாயம் தீர்ப்பாரே கொடிய நரகமாம் பலனளிப்பாரே
தேவனின் கோபம் நீ சுமந்திடுவாய் தேவகுமாரனை நீ வெறுத்து விட்டால்