ஏசுவின் அன்பு பொங்க
esuvin anbu ponga
ஏசுவின் அன்பு பொங்க ஏடெடுத்தே வரைந்தேன் எந்தன் நாவு எழுத்தாணி எடுத்துரைத்து கவிபாடும்
1. சாந்தமும் சத்தியமும் நீதியும் நேர்மையும் சொல்லொணா அன்பு தியாகம் தூய்மையும் நிறைந்தவர் சீர் தியேக மைந்தன் மனம் கவர்ந்த மணாளன் உயிருள்ள மட்டும் உம்மை பாடி உம் நாமம் ஓங்க உழைப்பேனே
2. கர்த்தரின் காருண்யம் எத்தனை பெரியதே கண்ணுறங்காமல் என்னை இராப்பகல் காப்பவர் இயேசுவே எந்தன் நேசர் இம்மானுவேல் எந்தன் மீட்பர். இம்மட்டும் காத்த எபிநேசர் இனிமேலும் காக்கும் நல் மேய்ப்பர்
3. தூய நல் ஆவியே எந்தன் மேல் பொழியுதே தேற்றரவாளன் என்னை ஆற்றியே தேற்றினார் துன்பங்கள் இன்பமாக ஆ மாறுதே வாரும் தேவா சீயோனிலே மங்கள நாளே ஜெய கீதம் பாடி மகிழ்வேனே