ஏசு ராஜாவே
esu raajaavae
ஏசு ராஜாவே ஏழை என் ஜெபம் கேளும் ஏற்ற வேளையில் உன்னை உயர்த்துவேன் என்றவர் நீரே (2)
1. உமது சத்தியத்தினிமித்தம் உமது கிருபையின் நிமித்தம் உம் நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும் எங்கள் பிதாவே
2. தமக்குச் சித்தமான யாவும் தவறாமல் செய்திடும் தேவா தமக்குப் பயப்படுவோரை தாங்கி ஆசீர்வதிப்பாரே
3. பரிசுத்தவான்களின் மரணம் - உம் பார்வைக்கு அருமையுள்ளதே பரிசுத்தமுள்ள பரனே பரிசுத்த பாதையில் நடத்தும்
4. உண்மையாய் ஊழியம் செய்தால் உத்தம பங்கை அளிப்பீர் உம் வீட்டில் எங்கும் உண்மையாய் உழைத்த மோசே போல் மாற்றும்