ஏசு ராஜா ஓடி வந்தாராம்
esu raajaa odi vandhaaraam
ஏசுராஜா ஓடி வந்தாராம் நல்ல ஏழைகளைத் தேடி வந்தாராம் நாட்டுப்புற மேட்டிலே மாட்டுக் கொட்டா வீட்டில் பாலகனாய் பிறந்துப்புட்டாராம்
ஊரிலேதான் யாருமில்லீங்க - அந்த ஊருபக்கம் ஆடுமாடுங்க - 2 துன்பத்துல பாருங்க பட்டிக்காட்டு ஜனங்க பணிபுரிய இடையருங்க - 2
பொருளுபக்கம் போகாதீங்க வெறும் நீர்க்குமிழி வாழ்வுதானுங்க - 2 சின்னப்பிள்ளை பாருங்க ஏசுநாதர் பேருங்க அருளை வாரி வழங்குவாருங்க - 2