ஏசு பிறந்தாரே ஈலோகில்
esu pirandhaarae eelogil
ஏசு பிறந்தாரே ஈலோகில் ஏழையாய் - 2 இந்நிலத்தை மீட்கவே ஆதியிலே வார்த்தையாக இருந்த வா - 2 ஆதிபன் அன்பினாலே - 2
தீர்க்கன் உரைப்படி தேவனின் பாலனாய் இந்நிலத்தில் பிறந்தார் - 2 கிறிஸ்மஸ் தினமிதில் கிறிஸ்துவை தியானிப்பது, கிருபையைப் பெற்றிடுவோம் - 2
ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதியாக இன்னிலத்தில் உதித்தார் காருண்ணியர் அன்பினால் பாவங்கள் போக்கிட கர்த்தர் பிறந்தனரே - 2
வழியும், சத்தியமும், ஜீவனுமானவர் வாதைகள் தீர்த்திடவே - 2 பகையாம் நடுச்சுவர் பிரிவினை தகர்த்திட பாதகம் போக்கிடவே - 2
உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மானிடர் மேல் பிரியமும் - 2 நிலைத்தோங்கச் செய்திட நேசர் பிறந்தாரே நீசர் நம் சாபம் தீர்க்க - 2