எருசலேம் குமாரத்தியே
erusalem kumaarathiyae
எருசலேம் குமாரத்தியே கேள் இந்த நாள் கிருபையாய் தேவன் உனக்கு தந்த நாள் சிந்தித்து மனந்திரும்பிடு - நீயும்
1. அநற்குல திராட்சை செடியாய் உன்னை நாட்டினேன் பற்பல வேலை செய்து நீர் பாய்ச்சினேன் (2)
ஆகாத காட்டுத் திராட்சைச் செடியின் கொடியாக மாறி இன்று போன தென்னவோ-காட்டு
2. செழிப்பான மேட்டிலே உன்னை நாட்டினேன் அழிக்காமல் உனை சுற்றி வேலியடைத்தேன் (2)
கோபுரமும் ஆலையையும் கட்டி முடித்தேன் கல் பொறுக்கி களை எடுத்து காத்திருந்தேனே நீ - தந்ததோ கசப்பான பழங்கள் அல்லவோ--கோபுரமும்
3. சொந்தம் என்று உன்னிடத்தில் நாடி வந்தேனே இரத்த பந்தம் உண்டு என்று உன்னை தேடி வந்தேனே (2) நிந்தையாய் பேசி என்னை தள்ளிவிட்டாயே அந்த நாளில் என்ன செய்வாய் சொல்லு சீயோனே நீ (2)