எருசலம் அது தேவனின் நகரம்
erusalam adhu devanin nagaram
எருசலம் அது தேவனின் நகரம் எருசலம் அது சத்திய நகரம் உனக்காக நான் வேண்டுதல் செய்கிறேன் எருசலம் இந்தியாவை நீ அறிய வேண்டுமே எருசலம்
சீயோனிலிருந்து வேதம் புறப்படும் எருசலமும் உம் வசனம் தரும் -2 ராஜாதி ராஜன் மகாராஜன் இயேசு ஆயிரம் வருஷம் அரசாளுவார் -2
எருசலேமே கர்த்தரின் ஆலயம் மலைகள் மேலாய் உயர்த்தப்படும் -2 ஜாதிகள் உன்னை தேடி ஓடி வருவார்கள் கர்த்தரின் வெளிச்சத்தில் நடந்திடு வாய் -2
எருசலேமே சீயோனின் தேவன் உனக்காய் வைராக்கியம் கொண்டிருப்பார் -2 அக்கினி மதிலாக உன்னை சூழ்ந்து நின்று உந்தனின் நடுவில் மகிமையாய் ஜொலிப்பார் -2
ஜீவத்தண்ணீர் நதிகள் பாயும் உன்னிலிருந்து எருசலேமே -2 கர்த்தரே பூமியின்மீதெங்கும் ராஜா ஒப்பற்ற ராஜாங்கம் உண்டாகுமே -2