ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
erugindraar thallaadi thavazhndhu
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்
கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான்
மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார்
இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே
சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்தக் குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார்
பின்னே நடந்த அன்பின் சீஷன் போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியை போல கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல்
செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும் சொந்தத் தாயின் அன்பதுவே எருசலமே ! எருசலமே என்றழுதார் கண் கலங்க
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal