எரியுமக்கினிபோல் உமதாவி
eriyumakkinibol umadhaavi
எரியுமக்கினிபோல் உமதாவி - நீர் சொரிந்திடும் பரனே தினந்தினமாய் - இப்போ உரைத்திட நாவால் உயிருடன் மொழிகள் 2 சொரிந்திடும் வரங்கள் நிறைந்தொழுக - என்னில்
சினேக அக்கினி என்னில் எரிந்தெழும்பி - வெகு தாகம் ஆத்துமாக்கள் மேலோங்கிடவே அன்பினுரைகளால் கடின உள்ளமிளகி வேகம் மரணபாதை விட்டுவிலக - நரர்
பலிபீடத்தின் திரு அக்கினியால் - என் அதரத்தின் குறைகள் அகற்றிடவும் நலமான சத்திய வசனங்கள் உரைக்க பலமான கிருபை பெற்றிடவும் - வாரும்
உம்மிலடியேன் பிரகாசித்திட - நான் என்னை முழுதுமாக வெறுத்து விட்டேன் மன்னவா எந்தனில் வந்து அவதரித்து வானாக்கினியால் முற்றும் கழுவி விடும் - என்னை
தேசமெல்லாம் பற்றி யெரிந்திடவே தாசரிலக்கினி மூண்டெரிந்து நாச உலகந்தன்னில் அக்கினிபோல் உபதேசிக்கத் திருநல் வார்த்தைகளை
அக்கினி புவிலிட வந்தவரே - மிக விக்கினம் பெருகுதே பாருமதை அக்கினியால் உமதடியார்கள் எரிந்திட அக்கினி அபிஷேகம் அளித்துவிடும் - இப்போ