ஏறெடுப்பேன் எந்தன்
ereduppen endhan
ஏறெடுப்பேன் எந்தன் கண்களை - நேராய் எனக்கொத்தாசை வரும் பர்வதம் மேல்
1. வானம் பூமியும் படைத்த தேவன் வல்லமையின் சிறந்தவரே சொல்லிற்குரிய துன்பத்திலும் இன்பம் தந்து தேற்றி அணைப்பார் ஏன் பயமினி இவ்வுலகில் - ஏறி
2. உண்மை மாறா மகத்துவ தேவன் உயர் கன்மலை மேல் அடிகள் நிறுத்தி கண்ணின் மணிபோல் காப்பேனென்றார் கவலையேனினி கடந்து செல்வோம் கண் விழிப்புடன் கானம்பாடி - ஏறி
3. ஞானத்தில் சம்பூர்ண ராம் தம் ஜனத்தின் குறைவறிந்தவரே ஆபத்திலே தாங்குவார் ஆதரிப்பார் பெரிய பரனே கருணையின் கண் உடையவரே - ஏறி
4. உலகின் முடிவு வரையும் இருப்பார் உண்மையான தோழனவரே கண்ணுறங்கார் காப்பவரே அண்ணாமலையே தோத்தரிப்பேன் ஆசைக்கேற்ற நேசரவரே - ஏறி
5. பிதாவின் முன்னாசாரியனாய் நிற்கிறாய் ரென்றும் என் இயேசு வேண்டுதல்கள் செய்கிறார் ஏறெடுப்போம் மகிமையவர்க்கே என்றென்றும் நன்றியுடனே - ஏறி