எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
eppodhum naadhanai sthothiri
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி - நாள் தப்பாமல் ஆண்டவன் பொற்பாதம் பணிந்து தப்பான பாதைகளில் சிக்காமல் நீ விலகி
1. இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை ஏதுக்கென் றுள்ளத்திலெண்ணிக்கையாய் நினை அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை
2. சண்டாள நான் உன் தோஷம் நீங்க சாயுஜ்ய வாழ்வின் சந்தோஷம் ஓங்க மண்டல விண்டிலன் உன்னை கை தாங்கவே
3. கிறிஸ்தேசு நாயகனே கிருபை உன் பூரணம் கம்பீரமாக நீ சொல் நாமோச்சாரண பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம்
4. வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியில், பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பில், நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும்
5. தம்புரு, கின்னரங்கள், ஜாலர், வீணை, மிருதங்கம், அப்பாவுடன் சங்கீத நாதமாய் அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி
6. துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும் இன்பமறிந்திலேன் என்றே நீ தாழினும் கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும்