எப்போ சேர்வேன்
eppo serven
எப்போ சேர்வேன் விண் வீட்டிலே எப்போ சேர்வேனோ என் வீட்டில்
1. தேவன் எனக்காய் பணித்த செம்மை சேர்மனையில் சேர்வேனே என் உள்ளம் மகிழ நேசர் எனக்காய் நிற்கிறார் ஏற்றுக்கொள்ளவே - எப்போ
2. இன்பம் கமழும் இன்னிசையால் இன்பம் சமூகமே என்றுமே இயேசென்னும் பெயரே அன்புடனே நான் சாற்றுவேன் ஆசை தீரவே - எப்போ
3. ஏறெடுப்பேன் தோத்திரங்கள் என்றும் என்றென்றும் ஏத்தி துதி கனம் துதியே ஏழை யானும் சாற்றிடவே தேவனளித்தாரே - எப்போ
4. தேவ கிருபை கிருபை இதுவே கிருபை எனவே நான் கீதங்கள் தினம் தினம் இசைத்தே நீடூழியாய் அன்பு மலர் நேசர் மேல் தூவ - எப்ப
5. தொனிக்குதே யென்னுள்ளம் நன்றி துதியின் நாதமே நினைக்கும்போ தெனதன்பர் நகரே. எப்போ சேர்வேனெந்தன் வீட்டில் என் நெஞ்சயருது