எப்போ நீர் வருவீர்
eppo neer varuveer
எப்போ நீர் வருவீர் என் இயேசப்பா ஏங்குதே என் உள்ளம் என்னிலே எப்போ நீர் என்னை சேர்க்க வருவீர் உம்மை காண வாஞ்சை என்னில் பெருகுதே
1. காணாமல் போன ஆட்டைப் போலவே பாதை மாறி போன என்னையும் தேடி அன்பாய் தோளில் தூக்கி சுமந்தீர் உம்மை காண வாஞ்சை என்னில் பெருகுதே
2. பாவத்தில் மரித்து வாழ்ந்த என்னையும் இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீரே ஜீவனையும் தியாகமாக தந்ததால் உம்மை காண வாஞ்சை என்னில் பெருகுதே
3. காத்திருந்து புதுபெலனை பெற்று நான் கழுகைப் போல உயர எழும்பிட பரிசுத்த ஆவியைத் தாருமே உம்மை காண வாஞ்சை என்னில் பெருகுதே
4. வானம் பூமி எல்லாமே மாறிடும் உம் வார்த்தை மாறாதென்றீர் ஜீவ மன்னா என்றும் நான் புசித்திடுவேன் உம்மைக் காண வாஞ்சை என்னில் பெருகுதே