எப்போ காண்பேன் என்னை
eppo kaanben ennai
எப்போ காண்பேன் என்னை மீட்கவே பாடு சகித்தவரை?
1. சஞ்சலமும் அடைந்தார், மிஞ்சும் பட்டினியும் சித்தர் கிஞ்சித்தேனும் நன்மை கானா தென்னையும் அறிந்தார் - எப்போ
2. சோபன் உருவம் எல்லாமுமே இழந்தார் சோபித்திடவே ஏழையேனும் தாதன் சந்நிதியில் - எப்போ
3. அங்கம் வாடினோராய், பங்கப் பாடுகளடைந்தார் அங்கு நானும் அண்ணலோடு ஆனந்தித்திடவே - எப்போ
4. இன்பமும் மறந்தார். பல துன்பமும் சுமந்தார் அன்பில் நானும் ஆழ்ந்து ரசித்து சோகமடைந்திடவே - எப்போ
5. இன்ப நேசரவர், மிக நேசம் பெறுகிறவர் என்று காண்பேன், கூறும் தோழரே, உள்ளம் வாஞ்சிக்குதே - எப்போ